இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக மஹேல ஜயவர்தன

இலங்கை தேசிய கிரிக்கெட் அணி மற்றும் 19 வயதிற்குட்பட்டோருக்கான அணி ஆகியவற்றுக்கு ஆலோசகராக இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை இன்று (24) வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

இருபதுக்கு - 20 ஆண்கள் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் போது முதலாவது சுற்றில் இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக அவர் செயற்படுவார் என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

அத்தோடு, மஹேல ஜயவர்தன ஐ.பி.எல் தொடரில் பங்கேற்றிருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராகவும் செயற்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.




இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக மஹேல ஜயவர்தன இலங்கை கிரிக்கெட் அணியின் ஆலோசகராக மஹேல ஜயவர்தன Reviewed by Editor on September 24, 2021 Rating: 5