(றிஸ்வான் சாலிஹு)
அக்கரைப்பற்று புத்தகக் காட்சியின் இலச்சினை (Logo), இன்று (21) செவ்வாய்க்கிழமை மாலை உத்தியோகபூர்வமாக பேஜஸ் புத்தக இல்லத்தில் விழாக்குழுவின் தலைவர் சிறாஜ் மஸ்ஹூர் தலைமையில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இந்த இலச்சினையை மூன்று சிறார்கள் மூலம் உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதோடு, இலக்கியவாதிகள், விழா ஏற்பாட்டுக்குழு அங்கத்தவர்கள் கலந்து கொண்டதோடு, புத்தக் காட்சி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 29,30,31 ஆகிய மூன்று தினங்களில் அக்கரைப்பற்று AIMS International School வளாகத்தில் இடம்பெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புத்த காட்சியின் மற்றொரு நிகழ்வான 'நான் விரும்பும் புத்தகம்' போட்டி நிகழ்ச்சி பற்றிய அறிவித்தல் இன்று இரவு 9.00 மணிக்கு வெளியிடப்படும் என்று விழா ஏற்பாட்டுக்குழு தலைவர் சிறாஜ் மஸ்ஹூர் தெரிவித்துள்ளார்.
Reviewed by Editor
on
September 21, 2021
Rating:




