(றிஸ்வான் சாலிஹு)
எமது பிரதேசத்தின் கொவிட்-19 தொற்றைத் தொடர்ந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் அத்தியாவசிய தேவைப்பாடுகளை அறிந்து பலரும் தங்களால் இயன்ற உதவிகளையும் பங்களிப்புகளையும் வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் வைத்தியராகக் கடமையாற்றி வரும் டாக்டர் நிமாஷா அவர்கள் ஜேர்மனியில் வசிக்கும் அவருக்கு அறிமுகமான ஒரு நண்பியூடாக 06 சக்கர நாற்காலிகளை வைத்தியசாலைக்கு நன்கொடையாக இன்று (01) புதன்கிழமை வழங்கி வைத்தார்.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.எச்.எம்.ஆஷாத் தலைமையிலான குழுவினரிடம் குறித்த சக்கர நாற்காலிகள் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வைத்திய அத்தியட்சகரிடம் ஒப்படைத்த சக்கர நாற்காலி
Reviewed by Editor
on
September 01, 2021
Rating:
Reviewed by Editor
on
September 01, 2021
Rating:
