ரிஷாட் பதியுதீன் சார்பில், வெள்ளிக்கிழமை நீதிமன்றில் சிறப்பு வாதங்கள்

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் சார்பில், விசேட வாதங்கள் எதிர்வரும் 07 ஆம் திகதி முன்வைக்கப்படவுள்ளன என்று கட்சியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

இதற்கான அனுமதியை இன்று (01) கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே வழங்கினார். அதன்படி எதிர்வரும் 07 ஆம் திகதி, ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா சிறப்பு வாதங்களை முன்வைக்கவுள்ளார்.

இதற்கிடையே, நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை, இது தொடர்பில் எழுத்து மூல சமர்ப்பணங்களை நீதிமன்றில் முன்வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

கொவிட் -19 நிலைமை காரணமாக சந்தேக நபர்கள் எவரும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவில்லை. ஸ்கைப் தொழில் நுட்பம் ஊடாக சந்தேக நபர்களை நீதிவான் மேற்பார்வை செய்தார். சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்புக்காக இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில் சந்தேக நபர்களின் விளக்கமறியல் 7 ஆம் திகதிவரை நீடித்து கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டார்.

அன்றைய தினமேமக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் சார்பில் வாதங்களை முன்வைக்கவும் நீதிவான் அனுமதியளித்தார்.



ரிஷாட் பதியுதீன் சார்பில், வெள்ளிக்கிழமை நீதிமன்றில் சிறப்பு வாதங்கள் ரிஷாட் பதியுதீன் சார்பில், வெள்ளிக்கிழமை நீதிமன்றில் சிறப்பு வாதங்கள் Reviewed by Editor on September 01, 2021 Rating: 5