திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் வேளையில் கிண்ணியா பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தொழில் செய்ய முடியாது கஷ்டப்படும் குடும்பங்களுக்கு உலர் உணவு பொதிகள் இன்று(9) வழங்கி வைக்கப்பட்டது.
எம். பி.எம் . பவுண்டேஷன் நிதி உதவியுடன் , கிண்ணியா தீர்ப்பாயத்தின் நேரடி பங்களிபுடன் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தொழில் செய்ய முடியாது கஷ்டப்படும் குடும்பங்களுக்கு இவ்வாறு உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சம்மாவச்சதீவு, பூவரசந்தீவு, மஃரூப் கிராமம் , நடுத்தீவு, உப்பாறு, காக்காமுனை மணியரசன்குளம், பெரியாற்றுமுனை மற்றும் ஆலங்கேணி போன்ற கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலுள்ள வறுமையில் கோட்டில் வாழும் மக்களுக்கு இந்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
அரிசி, சீனி, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, தேயிலை, போன்ற பொருட்கள் சுமார் ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலருணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக இன்று (9) சம்மாவச்சதீவு கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள 30 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகள் கிண்ணியா பிரதேச செயலாளர் எம். ஏ.எம். அனஸ் அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது
கிண்ணியா தீர்ப்பாயத்தின் தலைவர் எம்.எப்.பர்ஸித்,செயலாளர் ஐ.ஏ.எம்.முயீஸ் மற்றும் ஊடகவியலாளர் ஐ.எம்.இர்ஷாத் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
அதனை தொடர்ந்து பூவரசந்தீவு ,புதுக்குடியிருப்பு, மணியரசன்குளம் பிரதேசத்திலுள்ள வாழ்வாதாரம் பாதிக்கப்பட கஷ்டப்படும் மக்களுக்கு பிரதேச செயலாளரினால் நிவாரணப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.
ஏனைய பிரதேசங்களிலுள்ளவர்களுக்கும் கட்டங்கட்டமாக நிவாரணப் பொதிகள் எம்.பி.எம். பௌண்டேஷனினால் வழங்கப் படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Editor
on
September 09, 2021
Rating:





