வீட்டுத் தோட்ட பயனாளிகளுக்கு தென்னை மற்றும் பயிர் விதை வழங்கல்

(றிஸ்வான் சாலிஹு, ஐ.எல்.வஹாப்)

செளபாக்கிய தேசிய வீட்டுத் தோட்ட அபிவிருத்தி வேலைத்திட்டம் 2021/2022 பெரும்போகத்திற்கான மரக்கன்றுகள் மற்றும் விதைப்பைகள் தெரிவு செய்யப்பட்ட வீட்டுத் தோட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (09) வியாழக்கிழமை காலை அக்கரைப்பற்று மேற்கு சமுர்த்தி வங்கி காரியாலயத்தில் இடம்பெற்றது.

அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அவர்களின் தலைமையிலான அரசாங்கம் நாட்டில் பல்வேறு  வேலைத்திட்டங்களை முன்னடுத்து வரும் இச்சந்தர்ப்பத்தில், தேசிய வேலைத்திட்டமாக தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான தென்னங்கன்றுகளும் மற்றும் பயிர் விதைகளும் வழங்கி வைக்கப்பட்டது.

அத்தோடு, சமுர்த்தி பயனானிகளுக்கான கணணி மயப்படுத்தப்பட்ட பண வைப்பு புத்தகமும் இந்நிகழ்வில் வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அஷ்ஷேக் ரீ.எம்.எம்.அன்சார் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.பீ.எம்.ஹுசைன், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் யூ.கே.எம்.நழீம், திட்ட முகாமையாளர் ஏ.எல்.ஹமீட், வலய முகாமையாளர் ரீ.சுசாந்தன், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் கள உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
















வீட்டுத் தோட்ட பயனாளிகளுக்கு தென்னை மற்றும் பயிர் விதை வழங்கல் வீட்டுத் தோட்ட பயனாளிகளுக்கு தென்னை மற்றும் பயிர் விதை வழங்கல் Reviewed by Editor on September 09, 2021 Rating: 5