நாடே முடங்கிய நிலையில் வெறும் 45நாட்களில் மட்டக்களப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவரால் புதியவகை உழவு இயந்திரமொன்றை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார்.
குறித்த சாதனையை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியைச் சேர்ந்த கோகுலரஞ்சன் எனும் இளைஞனே நிகழ்த்தியுள்ளார்.
இந்த உழவு இயந்திரமானது பாவிக்க முடியாது என்ற நிலையில் வீசப்பட்ட உதிரிப்பாகங்களை வைத்து வெறும் 45 நாட்களில் சிறு தொகை பணமும் செலவு செய்தே மேற்படி இயந்திரத்தை தயாரித்துள்ளார்.
இவ்வாறு தாயாரிக்கப்பட்ட உழவு இயத்திரத்தின் வெள்ளோட்டமானது அண்மையில் களுவாஞ்சிகுடியில் இடம் பெற்றது. இதன்போது சிறப்பான முறையில் விவாசாயத்தினை மேற்கொள்ளக் கூடிய வகையில் இவ் உழவு இயந்திரம் செயற்பட்டதனை அவதானிக்க கூடியதாக இருந்தது.
இந்த இயந்திரத்தை தயாரித்து சாதனை படைத்த இளைஞனுக்கு மக்கள் பாராட்டை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
