முழுமையாக கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டு நாட்டிற்கு வரும் இலங்கை மற்றும் வெளிநாட்டு விமான பயணிகளுக்காக விதிக்கப்பட்டிருந்த சுகாதார வழிகாட்டி ஆலோசனைகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கட்டுநாயக்கா மற்றும் மத்தள விமான நிலையங்களில் நேற்று (28) நள்ளிரவு முதல் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட சுகாதார வழிகாட்டி ஆலோசனை விதிகள் அமுல்படுத்தப்பட்டுள்ளன.
புதிய சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய நாட்டிற்கு வரும் இலங்கை பிரஜைகளும் கடற்படையினரும் இரட்டை பிரஜா உரிமைகளை கொண்டவர்களும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிவில் விமான சேவைகள் அதிகார சபையும் அனுமதியை பெற வேண்டிய அவசியம் இல்லை.
எந்த விமான பயணியும் முழுமையான தடுப்பூசியை பெற்றுக்கொண்டு இரண்டு வாரங்கள் கடந்ததன் பின்னரும், தான் புலம்பெயரும் நாட்டில் எழுபத்தி இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னர் மேற்கொண்ட பிசிஆர் பரிசோதனையின் பிரதி அறிக்கைக்கு அமைய தொற்றாளர் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டால் நாட்டில் மீண்டும் PCR பரிசோதனையை மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லை.
முழுமையாக தடுப்பூசி ஏற்றிக்கொள்ளாத வெளிநாட்டவர்கள் உயிரியல் குமுழியாக தமது ஹோட்டல்களுக்கு அனுப்பப்படுவார்கள். அதன் பின்னர் அங்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
எனினும் இலங்கையர்கள் விமான நிலையத்தில் அல்லது தங்கியிருக்கும் ஹோட்டலில் பிசிஆர் பரிசோதனையை மேற்கொண்டதன் பின்னர் அதன் பெறுபேறுக்கு அமைய தொற்றாளர் இல்லை என உறுதிப்படுத்தப்பட்டால் வீடுகளுக்கு செல்ல முடியும்.
இதன் பின்னரும் அங்கு 12வது தினத்தில் மீண்டும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும். கொவிட் தொற்று இல்லை என அங்கு உறுதிப்படுத்தப்பட்டால் அவர்கள் சமூகத்துடன் சேர்ந்து செயற்பட முடியும்.
(News.lk)
