கொவிட் தடுப்பூசி தொடர்பான பொதுமக்களுக்கான அறிவித்தல்

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் இதுவரை 30 வயதிற்கு மேற்பட்ட முதலாவது தடுப்பூசி ஏற்றாதவர்களுக்கு முதலாவது தடுப்பூசியும் , முதலாவது தடுப்பூசி ஏற்றி ஒரு மாதம் பூர்த்தியானவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியும் நாளை செவ்வாய்க்கிழமை (07) காலை 8:30 மணியிலிருந்து மாலை 2 மணிவரை வழங்கப்படவுள்ளதாக அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் , அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி, ஆயிஷா மகளிர் பாடசாலை, அஸ்-ஸிராஜ் மகா வித்தியாலயம் மற்றும் அல்- பாத்திமியா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தடுப்பூசி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தடுப்பூசியினை பெற வருபவர்கள் தயவு செய்து தங்களுடைய அடையாள அட்டையையும் முதலாவது தடுப்பூசி பதிவு அட்டயையும் தவறாது கொண்டு வருமாறும் வேண்டப்படுவதோடு, இச்சந்தர்பத்தை தவறாது பயன்படுத்துமாறும் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் அக்கரைப்பற்று அனர்த்த முகாமைத்தவக்குழுவினரும் இணைந்து பொதுமக்களை வினயமாக கேட்டுள்ளனர்.



கொவிட் தடுப்பூசி தொடர்பான பொதுமக்களுக்கான அறிவித்தல் கொவிட் தடுப்பூசி தொடர்பான பொதுமக்களுக்கான அறிவித்தல் Reviewed by Editor on September 06, 2021 Rating: 5