அக்கரைப்பற்று-01, கடற்கரை வீதியைச் சேர்ந்த அல்ஹாஜ் றஹீம் (Hima Rice Mill ) இன்று (09) அதிகாலை, சிகிச்சை பலனின்றி கல்முனை வைத்தியசாலையில் காலமானார்.
நேற்று (08) அக்கரைப்பற்று அம்பாறை வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் வீதி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அவர், கல்முனை வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவர், தம்பி இலவபரிசாரியின் மகனும், ராணியின் கணவரும், ரபீஸ்,ஹிமா ஆகியோரின் தகப்பனும், மௌலவி வொஸீம் (Technical college - akp) அவர்களின் மாமனாரும், எம்.எஸ்.எம்.பிஸ்ரின் (தொழில் நுட்ப கல்லூரி) அவர்களின் மாமாவும், சமுர்த்தி உத்தியோகத்தர் எம்.ஐ. முஹாஜீர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் அஜ்மல் ஆகியோர்களின் சகலனும் ஆவார்.
இறைவா அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னத்துல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.
(தகவல் - முஹாஜீர் முஹம்மது இஸ்மாயில்)
Reviewed by Editor
on
September 09, 2021
Rating:
