கொவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு Iconic Youths இனால் உலர் உணவு பொதிகள் வழங்கல்

(றிஸ்வான் சாலிஹு)

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றினால் பல குடும்பங்கள் தொழிலின்றி மிக சிரமத்துக்கு மத்தியில் வாழ்க்கையை நடாத்துவதை கண்ணூடாக பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

அதனடிப்படையில்,வாழ்க்கைச் சுமையை கஷ்டத்தோடு எதிர்கொள்ளும் சில குடும்பங்களை கண்டரிந்து அவர்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கான திட்டம் ஒன்றினை  Iconic Youths அமைப்பு தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது.

அவ்வாறாக 10 குடும்பங்களுக்கு தேவையான 1500 ரூபா பெறுமதியான பொருட்கள் இறைவனின் உதவியுடன் நேற்று காலை (01) இவ்வமைப்பின் இளைஞர்களினால் உரியவர்களின் கைகளுக்கு கொண்டு சேர்க்கப்பட்டதாக அமைப்பின் தலைவரும் சமூக ஆர்வலருமான யூ.எல்.தில்ஷான் தெரிவித்தார்.

இச்செற்திட்டத்திற்கு அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளன தலைவர் எஸ்.எம்.சபீஸ் 5Kg பெறுமதியான 15 அரிசி பொதிகள்  மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் ஒரு சகோதரர் 25,000 பணம், இன்னுமொரு சகோதரர் 1000 பணத்தினையும் தந்துதவினார் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இச்செயற்திட்டத்தின் இரண்டாம் கட்டம் இன்னும் சில நாட்களில் ஆரம்பிக்கபடவுள்ளதோடு, இவ்வாறான எத்தனையோ குடும்பங்கள் எம்மத்தியில் வாழ்கிறார்கள்.உங்களுடைய செல்வத்தின் ஒரு சிறுதொகையை அவர்களுக்காக கொடுக்க நீங்களும் முன்வாருங்கள் என்றும், இதற்காக உதவி புரிந்த அனைவருக்கும் எல்லா வல்ல இறைவன் நல்லருள்புரிய பிரார்திக்கிறோம் என்றும் அமைப்பின் தலைவர் தில்ஷான் தெரிவித்துள்ளார்.








கொவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு Iconic Youths இனால் உலர் உணவு பொதிகள் வழங்கல் கொவிட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு Iconic Youths இனால் உலர் உணவு பொதிகள் வழங்கல் Reviewed by Editor on September 02, 2021 Rating: 5