முப்பது இலட்சம் ரூபா பெருமதியான வைத்திய உபகரணங்கள் எதிர்க்கட்சி தலைவரால் வழங்கல்

ஐக்கிய மக்கள் சக்தியின் ''எதிர்க்கட்சியிலிருந்து ஒரு மூச்சு' நிகழ்ச்சித் திட்டத்துக்கு ஒருங்கிணைவாக ஆரோக்கியமான நாட்டைக் கட்டியொழுப்பும் நோக்கில் எதி்ர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களினால் நாடுபூராவும் நடைமுறைப்படுத்தும் "ஜன சுவய" கருத்திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட சமூக நலத்திட்டத்தின் 25 ஆவது கட்டமாக முப்பது இலட்சத்து முப்பது ஆயிரம்(ரூபா.3,030,000) பெறுமதியான அத்தியவசிய வைத்தியசாலை உபகரணங்கள் கிண்ணியா ஆதார வைத்தியசாலைக்கு வழங்கிவைக்கப்பட்டது.

அதனடிப்படையில், இரண்டு இலட்சத்து எழுபத்தி ஐயாயிரம்(ரூபா.275,000)  பெறுமதி வாய்ந்த Multiple Monitors உபகரணங்கள் 2ம்,பன்னிடரண்டு இலட்சத்து நாப்பது ஆயிரம் (ரூபா.1,240,000) பெறுமதியான Optiflow Nasal Therapy உபகரணங்கள் இரண்டும் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டதோடு இதனை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவின் கரங்களால் கிண்ணியா ஆதார வைத்தியசாலை அபிவிருத்தி குழு சார்பாக குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அஜித் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

கொரோனா பெருந்தொற்று காரணத்தால் பாதிப்புக்குள்ளாகியுள்ள மக்களுக்கு சுகாதார ரீதியாக நிவாரணங்களை வழங்கும் பொருட்டு ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் குழு, அமைப்பாளர்கள், ஐக்கிய மக்கள் சக்தியின் வெளிநாட்டுக் கிளைகள், உள்நாட்டு வெளிநாட்டு ஆதரவாளர்கள் "ஜன சுவய" கருத்திட்டத்தில் இணைந்து கொண்டு ''எதிர்க்கட்சியிலிருந்து ஒரு மூச்சு' நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றனர்.

இதற்கு முன்னர் 23 கட்டங்களில் 680 இலட்சம் (68,874,000) ரூபா பெருமதியான வைத்தியசாலை உபகரணங்களை வழங்கி வைக்க ஐக்கிய மக்கள் சக்தியால் முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.







முப்பது இலட்சம் ரூபா பெருமதியான வைத்திய உபகரணங்கள் எதிர்க்கட்சி தலைவரால் வழங்கல் முப்பது இலட்சம் ரூபா பெருமதியான வைத்திய உபகரணங்கள் எதிர்க்கட்சி தலைவரால் வழங்கல் Reviewed by Editor on September 02, 2021 Rating: 5