(முஹம்மட் ஹம்தான், றிஸ்வான் சாலிஹு)
பாலமுனை ரை ஸ்டார் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் சாதனையாளர்களை வீடு சென்று கெளரவிக்கும் வேலைத் திட்டத்திற்கு அமைவாக வியாழக்கிழமை (23) வெளியாகிய க.பொ.த சாதாரண தரம் பரீட்சையில் அனைத்துப் பாடங்களிலும் "A" தரச் சித்தி எய்திய பாலமுனை கிராமத்தைச் சேர்ந்த லாஹீர் முஹம்மட் ஆகில் (மின்ஹாஜ் தேசிய பாடசாலை) மாணவனும் முஹம்மட் மிஸார் பாத்திமா ஸம்றா (அல் ஹிதாயா மகளீர் கல்லூரி) மாணவியும் இன்று (25) சனிக்கிழமை கெளரவிக்கப்பட்டார்கள்.
கழகத்தலைவர் ஆசிரியரும், ஊடகவியலாளருமான ஐ.எல்.எம்.பாயிஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், கழக உறுப்பினர்களான சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், கணக்காளர் எம்.எப்.பர்ஹான், முன்னாள் தலைவர் எம்.ஐ.மனாப், ஆசிரியர் ஆர்.எம்.சாமில், விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் எம்.எம்.சாஜீன், மருத்துவ விற்பனை பிரதிநிதி எம்.ஐ.சுபைதீன், உப செயலாளர் எம். ஹம்தான், போக்குவரத்து சபை உத்தியோகத்தர் எம்.சாஜீத், கழகத்தின் மீடியா குழு உறுப்பினர் எம்.எச்.றுஹைமி ஹனி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
Reviewed by Editor
on
September 25, 2021
Rating:


