ஜனநாயக இடதுசாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் றாஸிக் ரியாஸ்தீனினால் 300 இலவச குடிநீர் இணைப்புகளுக்கான இணைப்பை பெறுவதற்கான கட்டண ரிசீட்கள் வழங்கும் நிகழ்வு இன்று (25) சனிக்கிழமை கிண்ணியாவில் குறிஞ்சாக்கேணி,பூவரசந்தீவு,சூரங்கள் மற்றும் வான்எல ஆகிய பிரதேசங்களில் நடைபெற்றன.
இந்நிகழ்வுகளில் கிண்ணியா பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் பஹீமா றிஸ்வி, பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் நிஜாம், கிண்ணியா பொலிஸ் பிரதிபொருப்பாளரும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான நிஹார் ஸலாம், கிண்ணியா பிரதேச சபை உறுப்பினர்களான கன்சுலா மற்றும் ஜிப்ரி ஆகியோருடன் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் மாவட்ட அமைப்பாளர் றாஸிக் ரியாஸ்தீன், ஜனநாயக இடதுசாரி முன்னணியின் கிண்ணியாவுக்கான மகளிர் அணித் தலைவி ஜரீனா ஆகியோருடன் பெண்கள் மனித உரிமை அமைப்பின் தலைவியும் சமூக சேவகியுமான நளீமா, ஊடகவியலாளர் இர்ஷாத் இமாமுத்தீன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Reviewed by Editor
on
September 25, 2021
Rating:







