கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக 1979ஆம் ஆண்டு உயர்தர வகுப்பு மாணவர்களினால் கதிரை வழங்கள்

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரியில் (தேசிய பாடசாலை) 1979 ஆம் ஆண்டு உயர்தரத்தில் (A/L -SC (HNCE) -1979 Batch) கல்வி கற்ற மாணவர்களினால், பாடசாலையில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கையினை மேம்படுத்தும் முகமாக Smart Class வகுப்பறைக்கான கதிரை கையளிப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை (15) காலை இந்த குழுமத்தின் தலைவரும், ஓய்வு பெற்ற கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளர் டாக்டர் ஏ.எல்.அலாவுதீன் தலைமையில் பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்த மாணவ குழுமத்தில் இருந்து ஒன்றாக படித்து இவ்வுலகை விட்டு பிரிந்த பழைய மாணவர்களான மர்ஹும் ஆரிபீன், மர்ஹூமா ஸணூபா, மர்ஹூம் றபீக், மர்ஹூம் பாறூக் மற்றும் அவர்களுக்கு கற்பித்து இவ்வுலகை விட்டு பிரிந்த ஆசிரியர்கள், அதிபர்கள் ஆகியோருக்காக இரண்டு நிமிடங்கள் பிராரத்தனையுடன் ஆரம்பமான நிகழ்வில் தலைமையுரை மற்றும் வரவேற்புரையை டாக்டர் அலாவுதீன் அவர்களும், எங்கள் உயர்தர வகுப்பு  பற்றி ஒரு சில வசனங்களை டாக்டர் கியாஸ் அவர்களும், விசேட உரையை இந்நிகழ்வின் அதிதிகளில் ஒருவரும், ஓய்வு பெற்ற அதிபருமான எம்.ஏ. உதுமாலெப்பை அவர்கள் இம்மாணவர்களின் பெருந்தன்மை மற்றும் இவர்கள் கல்வி கற்கும் போதும் அதற்கு பிற்காலத்திலும் பாடசாலைக்கு ஆற்றிய உதவி ஒத்துழைப்புக்களை பற்றி தெரிவித்தார்.

பாடசாலை அதிபரும், நிகழ்வின் பிரதம விருந்தினருமான ஏ.பீ.முஜீன் அவர்களிடம் கதிரை தொகுதி உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டதுடன், அதிபர் அவர்கள் இந்த உயரிய பணியை செய்த இந்த பழைய மாணவர்களுக்கு பாடசாலை சார்பில் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாக தெரிவித்தார்.

தங்களுக்கு கற்பித்த ஆசிரியர்களுக்கு இந்த மாணவர் குழுமத்தினால் நினைவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டதோடு, துஆ பிரார்த்தனையை மதிப்புக்குரிய மூத்த உலமாக்களில் ஒருவர் மௌலவி லத்தீப் அவர்களினால் விசேட துஆப் பிராத்தனையும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலையின் பிரதி மற்றும் உதவி அதிபர்கள், இக்குழுமத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள், பழைய மாணவ சங்க பிரதிநிதிகள், பழைய ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.



















கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக 1979ஆம் ஆண்டு உயர்தர வகுப்பு மாணவர்களினால் கதிரை வழங்கள் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக 1979ஆம் ஆண்டு உயர்தர வகுப்பு மாணவர்களினால் கதிரை வழங்கள் Reviewed by Editor on October 16, 2021 Rating: 5