சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 20பேர் பலி

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் வியாழக்கிழமை (07) ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 20பேர் பலியானதுன், 300 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.


இந்த பூகம்பம் 5.8 என்று ரிக்டர் அளவில் பதிவாகி இருந்தது. பூகம்பம் ஏற்பட்ட போது தலைநகர் இஸ்லாமாபாத் மட்டுமின்றி பல்வேறு நகரங்களையும் அதிரச் செய்தது, இந்தியாவின் டெல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் அதிர்வு உணரப்பட்டதுன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் மிர்பூரை மையமாகக் கொண்டு பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பூகம்பம் ஏற்பட்ட உடன் மிர்பூரில் உள்ள வீடுகள், கடைகள்,வர்த்தக கட்டிடங்கள் இடிந்து நொறுங்கின. இதனால் இடிபாடுகளில் ஏராளமானோர் சிக்கியுள்ளனர். இதனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அவசரநிலை அறிவிக்கப்பட்டு, காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் குவாமர் ஜாவித் பஜ்வா கூறுகையில், “இடிபாடுகளில் சிக்கி இருக்கும் மக்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ராணுவப்படைகள், மருத்துவக்குழுக்கள் பூகம்பம் நடந்த இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன” எனத் தெரிவித்தார்.








சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 20பேர் பலி சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 20பேர் பலி Reviewed by Editor on October 07, 2021 Rating: 5