உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை திகதிகளில் மாற்றம்

நவம்பர் மாதத்தில் இடம்பெறவிருந்த கல்வி பொதுத்தராதர  உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைகளை திட்டமிட்ட திகதிகளில் நடத்த முடியாதென கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். அதற்கமைய, குறித்த பரீட்சைகளை நடத்தும் திகதி பின்னர் அறிவிக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (07) பாராளுமன்றத்தில் நிலையிற் கட்டளைக்கு அமைவாக கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கையிலேயே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.


உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை திகதிகளில் மாற்றம் உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை திகதிகளில் மாற்றம் Reviewed by Editor on October 07, 2021 Rating: 5