வவுனியா மாவட்டத்தில் இனங்காணப்படுகின்ற கொரோனா தொற்றாளர்களின் சடுதியான அதிகரிப்பும், அதேபோல கொரோனா பெருந் தொற்றினால் ஏற்படுகின்ற மரண எண்ணிக்கைகளின் அதிகரிப்பையும் எவ்வாறு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது பற்றியும் மூடப்பட்ட பாடசாலைகளை சுகாதார வழிமுறைக்கு அமைய எவ்வாறு வெகுவிரைவில் ஆரம்பித்து மாணவர்களின் கல்வி முன்னேற்றச் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வது சம்பந்தமான விஷேட கலந்துரையாடலொன்று இன்று வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (01) வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ காதர் மஸ்தான், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் வவுனியா மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ. குலசிங்கம் திலீபன் மற்றும் வட மாகாண பிரதம செயலாளர், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளர்கள், முப்படை பிரதாணிகள், சுகாதார பரிசோதகர்கள் எனப் பலரும் குறித்த கலந்துரையாடலில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
