வரலாற்று சாதனை வெற்றி கொண்ட பாகிஸ்தான் அணி

உலகக் கிண்ண வரலாற்றில் இந்தியாவின் கனவை சிதைவடையச் செய்து வரலாற்றில் உலகக் கிண்ண முதலாவது வெற்றியை இந்திய அணியுடன் சாதனையுடன் கூடிய வெற்றியை பதிவு செய்தது பாகிஸ்தான் கிரிக்கெட் அணி. 

7ஆவது இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளின் சுப்பர் 12 சுற்றின் நேற்று (24) இடம்பெற்ற இரண்டாவது   போட்டியில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி 10 விக்கெட்டுகளால் அபார வெற்றி கொண்டு தமது சாதனை வெற்றியை பதிவு செய்தது.    

முதலில் துடுப்பெடுத்தாடிய  இந்திய  அணி 20 பந்துவீச்சு  ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 151  ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான்  அணி 17.5 பந்துவீச்சு ஓவர்கள் நிறைவில் எதுவித விக்கெட் இழப்பின்றி வெற்றி இலக்கை அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.



வரலாற்று சாதனை வெற்றி கொண்ட பாகிஸ்தான் அணி வரலாற்று சாதனை வெற்றி கொண்ட பாகிஸ்தான் அணி Reviewed by Admin Ceylon East on October 25, 2021 Rating: 5