பிரதேச செயலாளாரினால் கைத்தறி பயிற்சி நெறி ஆரம்பித்து வைப்பு

(அலுவலக செய்தியாளர்)

கிண்ணியா பூவரசந்தீவு கிராம உத்தியோகத்தர் பிரிவில் Muslim Aid நிறுவனத்தின் அனுசரனையுடன் கிண்ணியா பிரதேச செயலாளர் எம். ஏ அனஸ் அவர்களின் தலைமையில் கைத்தறி பயிற்சிநெறி ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இப்பயிற்சி நெறியில் முதற்கட்டமாக 40 பயிற்சியாளர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டதோடு,  இரண்டு மாத கால பயிற்சி காலம் நிறைவு பெற்றபின் பயிற்சி பெற்றோர் அந்நிறுவனத்திலேயே இணைந்து தொழில் முயற்சியினை மேற்கொள்ள முடியும் என்று பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.

இப்பயிற்சி திட்டமானது எதிர்வரும் காலங்களில் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






பிரதேச செயலாளாரினால் கைத்தறி பயிற்சி நெறி ஆரம்பித்து வைப்பு பிரதேச செயலாளாரினால் கைத்தறி பயிற்சி நெறி ஆரம்பித்து வைப்பு Reviewed by Editor on October 09, 2021 Rating: 5