இணையவழி நிகழ்வுகளை நடத்துவதற்கு தொழிநுட்ப உபகரணங்கள் வழங்கல்

ஊவா மாகாணத்தில் உள்ள அரசு நிறுவனங்களின் தகவல் தொடர்பு திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் இணையவழி நிகழ்வுகளை நடத்துவதற்குத் தேவையான தொழிநுட்ப உபகரணங்களை வழங்கும் நிகழ்வு ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில், ஆளுநர் ஏ.ஜே.முஸம்மில் இன்று (06) புதன்கிழமை நடைபெற்றது.

ஊவா மாகாண ஆளுநர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டத்தினால் (UNDP) யினால், ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) நிதி உதவியுடன், UNDP நிறுவனத்தின் CDLG வேலைத்திட்டத்தின் கீழ், இந்த உபகரணங்கள் வழங்கப்பட்டன.

குறித்த உபகரணங்கள் பதுளை மாவட்டச் செயலாளர் காரியாலயம் மற்றும் மொனராகலை மாவட்டச் செயலாளர் காரியங்களுக்கு இன்றைய தினம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

2020 ஆண்டு டிசம்பர் மாதமும் எமது வேண்டுகோளுக்கு அமைய உள்ளூராட்சி மன்றங்களுக்கும் இதுபோன்ற தொழிநுட்ப உபகரணங்கள் UNDP, CDLG வேலைத்திட்டத்தின் கீழ் வழங்கி வைக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.

இந்த கலந்துரையாடலில் ஊவா மாகாண பிரதான செயலாளர் P.B. விஜயரத்ன, பதுளை மாவட்டச் செயலாளர் தமயந்தி பரணகம, மொனராகலை மாவட்டச் செயலாளர் குணதாச அமரசிங்க, ஆளுநரின் செயலாளர் எம்.எம். விஜயநாயக, CDLG/UNDP வேலைத்திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் ஸிஹான் ஸரூக் ஆகியோர் கலந்துகொண்டனர்.







இணையவழி நிகழ்வுகளை நடத்துவதற்கு தொழிநுட்ப உபகரணங்கள் வழங்கல் இணையவழி நிகழ்வுகளை நடத்துவதற்கு தொழிநுட்ப உபகரணங்கள் வழங்கல் Reviewed by Editor on October 06, 2021 Rating: 5