பதுளையிலும் பலத்த மழை, வீதிகள் சேதம்

நேற்று (29) முதல் மலையகத்தின் பல இடங்களிலும் பலத்த மழை பெய்து வருவதால் பதுளையில் பல இடங்களில் பெய்துவரும் மழையினால் ஆறுகளில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது.

பசறை - நமுனுகுல பிரதான வீதியிலும், பள்ளக்கெட்டுவ - நமுனுகுல பிரதான வீதியிலும் கற்பாறைகள் வீதியில் சரிந்து விழுந்தமையால் சுமார் இரண்டு மணித்தியாலங்கள் வாகன போக்குவரத்து தடைப்பட்டிருந்தது. 

ஹாலிஎல நகர்பகுதி வெள்ளத்தில் மூழ்கியதினால் பதுளை - பண்டாரவளை பிரதான வீதியிலான போக்குவரத்தும் ஸ்தம்பிதமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






பதுளையிலும் பலத்த மழை, வீதிகள் சேதம் பதுளையிலும் பலத்த மழை, வீதிகள் சேதம் Reviewed by Editor on October 30, 2021 Rating: 5