அரச கூட்டுத்தாபனங்களின் தலைவா் பதவிக்கு சிறுபான்மையினர் புறக்கணிப்பு

(அஷ்ரப் ஏ சமட்)

ஜனாதிபதி விசாரனை ஆனைக்குழு முன்னைய ஆனைக்குழுக்கள் மற்றும்  குழுக்கள் ஆகியவற்றின் கண்டுபிடிப்புக்களை மதிப்பீடு செய்தல் மற்றும் எதிா்கால நடவடிக்கை எடுத்தல்  ஆனைக்குழுவின் அமா்வு புதன்கிழமை (13) பண்டாரநாயக்க ஞாபகர்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், ஆனைக்குழுவின் தலைவரும் உயா் நீதிமன்ற நீதிபதியுமான துலிப் நவாஸ் தலைமையில் நடைபெற்றது. 

ஆனைக்குழுவின் முன்னிலையில் சமாதான கவுன்சிலின் பணிப்பாளா்  கலாநிதி ஜெஹான் பெரேரா, ஹில்மி அகமட், உப தலைவா் முஸ்லிம் கவுன்சில், பிஸப்  அஸ்ரி பெரேரா, கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தா்  ரீ.ஜெயசிங்கம், கலாநிதி ஜோ வில்லியம், திருமதி விசாகா தர்மாதாச ஆகிய சமாதான செயற்பாட்டாா்களும் கலந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தனா்.

அங்கு வைக்கப்பட்ட கருத்துக்கள் பின்வருமாறு,

(1) இந்த நாட்டில் அமுலில் உள்ள தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுராதபுரத்தில் இரானுவ கிரிக்கட் மைதானத்தினை திறந்து வைத்த பலகையில் ஆங்கிலமும் சிங்கள மொழிகள் மட்டுமே காணப்பட்டது. தமிழ் மொழி இடம்பெறவில்லை.

(2) இலங்கையில் உள்ள அரச கூட்டுத்தாபணங்கள் ,அதிகார சபைகளின் தலைவா் பதவிகள் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்காக ஆங்கில பத்திரிகையில் 36பேர்கள் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. அதில் ஒரு சிறுபான்மையினருமே நியமிக்கப்படவில்லை உதாரணத்திற்கு வடக்கில் உள்ள பனை அபிவிருத்தி அதிகார சபையின்  தலைவா் பதவிக்கும்  பெரும்பான்மையினரின் பெயரே காணப்பட்டது.

(3)  33 அமைச்சுக்களின் செயலாளா்கள் நியமிகக்ப்பட்டுள்ளனா் அதில் ஒரே ஒருவா் தமிழராக நியமிகக்ப்பட்டிருந்தாா். 

(4) கொவிட் 19 மரணமாகும் முஸ்லிம்,கிரிஸ்த்தவா்களது சடலங்களை அடக்குவதற்காக பல போராட்டங்களுக்குப் பிறகு ஒரே ஒரு இடம் அடக்கம் செய்வதற்கு வழங்கப்பட்டது. ஆரம்ப கட்டத்தில் முஸ்லிம்களது சடலங்களை எரிப்பதற்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் 13 வழக்குகள்  தாக்கல் செய்தும் அதனை உயா் நீதிமன்றம் விசாரிப்பதற்கே ஏற்றுக் கொள்ளாமல் தள்ளுபடி செய்தது.  ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒர் இடமாவது  முஸ்லிம்களுக்கு வழங்கப்படல் வேண்டும்.

(5) ஞானசாரத் தேரர் பகிரங்கமாகவே அரச  மற்றும் தனியாா் தொலைக்காட்சிகளில் தோன்றி  முஸ்லிம்களது இறைவன் அல்லாஹ்வையே வெறுப்புப் பேச்சுக்களை பேசுகின்றாா். இதுவரை அதற்காக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆனால் முகநுாலில் எழுதிய இளம் எழுத்தாளா்கள், குர்ஆனை வைத்திருந்தவா்கள், தனது போனில் குர்ஆன் வசனம் ஹதீஸ் வைத்திருந்தவா்கள் பயங்கரவாத சட்டம் வெறுப்பு பேச்சு என்ற நிலையில் வருடக்கணக்கில் சிறையில் வைக்கப்பட்டுள்ளனா்.  90 நாட்களுக்கு மேலாக அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா் படுத்தாமலும் பினை வழங்காமலும் வைக்கப்பட்டுள்ளனா்.

(6) கடந்த 30 வருடகாலமாக வடக்கு கிழக்கு தாய்மாா்களது பிள்ளைகள், உறவினா்கள் காணாமல் பேய்யுள்ளனா். அவா்கள் பற்றி எவ்வித தகவலும் இல்லை அது பற்றி அவா் உயிருடன் இருக்கின்றாரா ? இல்லையா என்று உறவினா்களுக்கு அறிவிக்கப்படவில்லை.

(7) இந்த நாட்டில் சமுக செயற்பாடுகள் சிவில் சமுகத்திற்காக குரல் கொடுக்கும் சகல என்.ஜி.ஓ க்களையும் ஒருபோதும் இல்லாத வாறு என்.ஜி.ஓக்கள் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினை பாதுகாப்பு அமைச்சில் வைக்கப்பட்டு சகல செயற்பாடுகள் அடிக்கடி பாதுகாப்பு படையினா் பரிசோதானை செய்கின்றனா்

(8) இந்த ஆட்சியில்தான்  இன நல்லுரவு தேசிய நல்லிணக்கம் பற்றிய மற்றும் புனா் வாழ்வு போன்ற அமைச்சுக்கல் இல்லாமல் செய்யப்பட்டுள்ளது. இதனால் பல கஸ்டங்களை பொதுமக்கள் எதிா்நோக்குகின்றனா்.



அரச கூட்டுத்தாபனங்களின் தலைவா் பதவிக்கு சிறுபான்மையினர் புறக்கணிப்பு அரச கூட்டுத்தாபனங்களின் தலைவா் பதவிக்கு சிறுபான்மையினர் புறக்கணிப்பு Reviewed by Editor on October 14, 2021 Rating: 5