மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை (13) மாவட்ட செயலகத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர்களான கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மற்றும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துகோரலவின் தலைமையில்  நடைபெற்றது.

சுபீட்ஷத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கமைய  திருகோணமலை மாவட்டத்தில் பல்வேறு  அபிவிருத்தி திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில்  தற்போது  722 வீடுகளை நிர்மாணிப்பதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதேபோன்று 755 வசதிகூட வசதிகளும் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் நீர்ப்பாசன செழுமை திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் இதுவரை 43 குளங்கள் புனர்நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.  இவற்றின் வேலைகள் நூற்றுக்கு 80 வீதமானவை பூர்த்தியடைந்துள்ளன.  ஏனைய மாவட்டங்களின் அடைவுமட்டங்களோடு ஒப்பிடும்போது  எமது மாவட்டத்தின் நிலை  சிறப்பாக காணப்படுவதாக இதன்போது அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.

ஒரு லட்சம் கிலோமீட்டர் நீளமான வீதிகளை காபட் வீதிகளாக மாற்றும் திட்டத்தில் திருகோணமலை மாவட்டத்தில் 545 கிலோமீட்டர் நீளமான வீதிகள் காப்பற் இடுவதற்கான வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக 13328 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் மாவட்ட செயலகம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அபிவிருத்தித் திட்டங்களும் இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துசித பி வணிகசிங்க, உள்ளூர் அதிகார சபைகளின் தவிசாளர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் திணைக்கள தலைவர்கள் பிரதேச செயலாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.









மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் மாகாண ஆளுநர் தலைமையில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் Reviewed by Editor on October 14, 2021 Rating: 5