(றிஸ்வான் சாலிஹு, ஹுதா உமர், ஐ.எச்.ஏ.வஹாப்)
இறுதியாக வெளிவந்த க.பொ.தா சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளின் தரவரிசைகளின் அடிப்படையில் அக்கரைப்பற்று கல்வி வலயம் கிழக்கு மாகாணத்தில் முதல் இடத்தினை பெற்றுக்கொண்டுள்ள அதே வேளை தேசிய மட்டத்தில் ஒன்பதாவது இடத்தினையும் பெற்று மாகாணத்தில் சாதனையை நிலைநாட்டியுள்ளது.
இந்த சாதனையை பெறுவதற்கு இரவு பகலாக உழைத்த மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், வலயக் கல்வி பணிமனையின் அதிகாரிகள் ஆகியோருக்கு பெற்றோர்கள் நன்றி தெரிவிப்பதோடு, கிழக்கு மாகாணத்தில் இரண்டாம், மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களை அம்பாறை மாவட்டத்தில் உள்ள அம்பாறை வலயம், திருக்கோவில் கல்வி வலயம், மகாஓயா கல்வி வலயம் மற்றும் கல்முனை கல்வி வலயங்கள் பெற்றுக் கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Reviewed by Admin Ceylon East
on
October 06, 2021
Rating:


