உலக ஆசிரியர் தினமான இன்று புதன்கிழமை (06) இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் காலை 10.00 மணிக்கு அக்கரைப்பற்று வலயக்கல்வி பணிமனைக்கு முன்பாக கண்டனப் பேரணி ஏற்பாடாகியுள்ளது.
இந்தப்போராட்டத்தை வெற்றி கொள்வதற்காக அனைத்து அதிபர் ஆசிரியர்களும் அக்கரைப்பற்று வலயக்கல்வி அலுவலகத்துக்கு அருகாமையிலுள்ள தைக்காநகர் மையாவாடிக்கு முன்பாக காலை 9.00 மணிக்கு ஒன்று கூடுமாறு, இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இச்சந்திப்பு தொடர்பான உயர் சபை கூட்டம் இலங்கை ஜனநாயக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் கமால்தீன் அவர்களின் இல்லத்தில் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட முடிவின் பிரகாரமே இக்கவனயீர்ப்புப் போராட்டம் இடம் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Reviewed by Admin Ceylon East
on
October 06, 2021
Rating:



