பொலிசிஸ்டிக் ஓவரியன் சின்றோம்

இது அநேகமான நமது பெண்களில் ( 25%) காணப்படும் ஒரு நிலைமையாகும். 

இதன் விளைவுகள் பல்வேறு விதமாக வெளிப்படலாம். பொதுவாக பின்வரும் நோயறிகுறிகளுடன் வெளிப்படலாம். 

1. பொதுவாக மாதவிடாய் சீரற்று மாதக்கனக்கில் மாதப்படுதல் அல்லது மாதவிடாய் முற்றாக தடைப்பட்டு மருந்துகள் பாவித்தால் மட்டுமே ஏற்படக்கூடிய நிலைமை.

2. கர்ப்பம் தரித்தல் தாமதமடைதல்

3. அதிக உடற்பருமன்

4. அதிகளவு உரோம வளர்ச்சி, அதிக முகப்பரு ஏற்படல்

பெண்களில் ஒவ்வொரு மாதமும் முட்டை / சூழ் ஒன்று உருவாகி சரியான முறையில் வெளியேறினால் மாதவிடாய் சீராக நடைபெறும்.

பொலிசிஸ்டிக் ஓவரி உள்ளவர்களில் முட்டைகள் முறைப்படி பெரிதாக வளர்ந்து வெளியேற்றம் நடைபெறுவதில்லை. இதனால் ஏற்படும் ஹோர்மோன் மாற்றங்களால் மாதவிடாய் தாமதப்படுகின்றது. 

இதற்கு அடிப்படை காரணம் பரம்பரை (genetic) காரணிகளும் , இன்சுலின் ஹோர்மோனின் வினைத்திரன் குறைதல் ( Insulin resitance ) என்பனவாகும்.

மேற்குறிய நோயறிகுறிகளை தவிர்த்து பல நீண்டகால உடல் உள பிரச்சினைகளும் ஏற்படலாம். 

1.உயர் குருதியலுத்தம் High blood pressure

2. நீரிழிவு Diabetes

3. மன அழுத்தம் Depression

4. தூக்கத்தில் மூச்சடைப்பு ஏற்படுதலினால் அதிகளவு உடற்சோர்வு Sleep Apnea

5. கருப்பை புற்றுநோய் Endometrial Cancer

இதன விளைவுகளை குறைக்க என்ன செய்யவேண்டும்?

1. ஆரோக்கியமான வாழ்க்கைமுறை

- உணவு முறைகள் - அதிகளவு சீனி / மாத்தன்மையான, கொழுப்புடைய உணவுகளை குறைத்து சமநிலையான உணவுகளை எடுத்தல். உதாரணம். பச்சை கீரைவகைகள், மரக்கறி, மீன், இறைச்சி. 

- உடற்பயிற்சி :  தினமும் 30 நிமிடங்கள் வியர்க்கும் வரை வாரத்திற்கு 5 நாட்களாவது உடற்பயிற்சியில் ஈடுபடுதல். உதா: வேகமாக நடத்தல்

உடற்திணிவு / BMI  இனை 19-25 இல் பேணுதல்

குறைந்தது 3 மாதத்திற்கு ஒருதடவையாவது மாதவிடாய் ஏற்பட மருந்துகள் பாவித்தல் மூலம் நீண்டகால ரீதியில் கர்ப்பப்பை புற்றுநோய்கள் ஏற்படும் சந்தர்ப்பத்தை குறைக்கலாம்.  தொடர்ச்சியான ஹோர்மோன் மாத்திரைகள் தற்காலிக தீர்வையே தரும்.

கர்ப்பமடைய தாமதிக்கும் நிலையில் அதற்காக உரிய வைத்தியரிடம் மருந்துகளை பாவிக்கவேண்டும்.

இதன் விளைவுகளை முற்றாக குணப்படுத்தக்கூடிய மருந்துகள் இன்னும் கண்டறியப்படவில்லை. 

இந்நோயுள்ளவர்கள் இதன் விளைவுகளை கட்டுப்படுத்தவும் , தேவைப்படின் உரிய சிகிச்சைகளை பெறவும் தொடர்ச்சியாக தகுந்த மருத்துவரிடம் மருத்துவ ஆலோசனை பெறவும்.


Dr. A.C.M.Musthaq
MBBS, MD (Obs & Gyn ) , MRCOG (UK)
Resident Consultant Obstetrician and Gynaecologist
National Hospital Kandy


பொலிசிஸ்டிக் ஓவரியன் சின்றோம் பொலிசிஸ்டிக் ஓவரியன் சின்றோம் Reviewed by Admin Ceylon East on October 23, 2021 Rating: 5