"பைஷர்" கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம் - டாக்டர் காதர் தெரிவிப்பு

(றிஸ்வான் சாலிஹு)

கொரணா தொற்றிலிருந்து நம்மையும் நமது நாட்டினையும் பாதுகாக்கும் முகமாக அரசாங்கத்தினால் முன்னெக்கப்பட்டுள்ள கொவிட்டுக்கு எதிரான தடுப்பூசி ஏற்றும் நிகழ்வு நாடு தழுவிய ரீதியில் நடை முறைப்படுத்தப்படுவதை யாவரும் அறிவோம். அத்தோடு, கடந்த காலங்களில் 20 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றல் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது என்பதை நாமறிவோம்.

இதன் மற்றுமொரு அங்கமாக 12 முதல் 19 வயது வரையான கிளினிக் செல்லக்கூடிய இளவயதினர் மற்றும் வீடுகளிலுள்ள விஷேட தேவையுடைய இளவயதினர்களுக்கு தற்போது தடுப்பூசி நாடு முழுவதும் வழங்கப்படுகின்றது. 

அந்தவகையில்,அக்கரைபற்று ஆதார வைத்தியசாலையில் எதிர்வரும் திங்கட் கிழமை (04) காலை 8 மணியளவில் 12வயது முதல் 19 வயது வரையான கிளினிக் செல்லக்கூடிய இளவயதினர் மற்றும் வீடுகளிலுள்ள விஷேட தேவையுடைய இளவயதினர்களுக்கு பைஷர் தடுப்பூசி வழங்கப்பட உள்ளதாக அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எப்.எம்.ஏ.காதர் தெரிவித்துள்ளார்.

எனவே, உரிய நேரத்திற்கு உங்கள் பிள்ளைகளினை அழைத்துச் சென்று தடுப்பூசியினை ஏற்றிக் கொள்வதன் மூலம் கொவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாப்புப் பெற முடியும் என்று அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் காதர் தெரிவித்துள்ளார்.



"பைஷர்" கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம் - டாக்டர் காதர் தெரிவிப்பு "பைஷர்" கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பம்  - டாக்டர் காதர் தெரிவிப்பு Reviewed by Admin Ceylon East on October 03, 2021 Rating: 5