அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் விளையாட்டு கழக சீருடை அறிமுகமும், விளையாட்டு உபகரணங்கள் வழங்கலும்

அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் விளையாட்டுக் கழகத்தின் கிரிக்கட் அணியின் சீருடை அறிமுகமும், கழகத்தின் கடின பந்து வீரர்களுக்கு ஒரு தொகை விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் இன்று (20) புதன்கிழமை அட்டாளைச்சேனை “பீச் ஹவுஸ் ஹெஸ்டில்” இடம்பெற்றது.

கழகத்தின் தலைவர் ஊடகவியலாளர் றிசாத் ஏ காதரின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். 

இந்நிகழ்வில் கழகத்தின் கடின பந்து வீரர்களுக்கு ஒரு தொகை விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டதுடன், சுப்பர் சொனிக் விளையாட்டு கழகத்தின் கால்பந்து வீரர்களுக்கான பாதணிகளும் வழங்கிவைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் அட்டாளைச்சேனை பிரதேச விளையாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.அஜ்வத், மார்க்ஸ்மேன் விளையாட்டு கழகத்தின் ஆலோசகர் அப்துல் ஹமீட் மற்றும் சுப்பர் சொனிக் விளையாட்டு கழகத்தின் தலைவர் விரிவுரையாளர் ஏ.ஆர்.எம். சாதிக் ஆகியோருடன் விளையாட்டு வீரர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.







அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் விளையாட்டு கழக சீருடை அறிமுகமும், விளையாட்டு உபகரணங்கள் வழங்கலும் அட்டாளைச்சேனை மார்க்ஸ்மேன் விளையாட்டு கழக சீருடை அறிமுகமும், விளையாட்டு உபகரணங்கள் வழங்கலும் Reviewed by Editor on October 20, 2021 Rating: 5