பிரதேச செயலகத்தில் தகவல்களை சேகரிக்கும் Data Bank வேலைத்திட்டம் ஆரம்பம்

(றிஸ்வான் சாலிஹு)

இறக்காமம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அனைத்துத் தகவல்களையும் எண்ணிமப்படுத்தும் "Data Bank"  வேலைத்திட்ட ஆரம்ப நிகழ்வு பிரதேச செயலாளர் அஷ்ஷேக் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) அவர்களின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (26)  இடம்பெற்றது.

இறக்காமம் பிரதேச செயலக பிரிவிற்குற்பட்ட அனைத்து தரவுகளையும் எண்ணிமப்படுத்துவதன் ஊடாக பொதுமக்களுக்குத் தேவையான சேவைகளை இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொடுப்பது மட்டுமன்றி டிஜிடல் உலகுக்கு ஏற்ப காரியாலயத்தினுடைய செயற்பாடுகளை வினைத்திறனாக்கும் நோக்கோடும் இவ்வேலைத்திட்டம் பிரதேச செயலக உற்பத்தின் திறன் பிரிவினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ்வேலைத்திட்டமானது உற்பத்திதிறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஏ.ஜி. பிராஸ் இம்தியாஸ், எம்.எப்.எம். பாஷி ஆகியோரின் ஒருங்கிணைப்பில் செயற்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டம் தொடர்பான ஆரம்ப அறிமுகமும் தெளிவூட்டலும் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தில் இவ்வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்த Data Bank குழுவின் உறுப்பினர்களான ICT உதவியாளர் ஏல்.எல். அமானி, உளவளத்துணை உத்தியோகத்தர் எஸ்.ஆப்தீன், அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.எம். கலீல் ஆகியோரினால் வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் கிராம சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.





பிரதேச செயலகத்தில் தகவல்களை சேகரிக்கும் Data Bank வேலைத்திட்டம் ஆரம்பம் பிரதேச செயலகத்தில் தகவல்களை சேகரிக்கும் Data Bank வேலைத்திட்டம் ஆரம்பம் Reviewed by Editor on October 27, 2021 Rating: 5