2021 ஆம் ஆண்டின் கலாபூஷண விருதிற்காக விண்ணப்பம் கோரல்

கலைத்துறையில் விஷேட பங்களிப்பு வழங்கி வரும் 2021.12.15 ஆம் திகதி 60 வயதினை பூர்த்தி செய்துள்ள முஸ்லிம் கலைஞர்களிடமிருந்து கலாபூஷண விருது பெறுவற்கான விண்ணப்பங்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் கோருகின்றது.

மேற்படி விண்ணப்ப படிவங்களை முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள இணையத்தள முகவரியான www.muslimaffairs.gov.lk மூலம் அல்லது தங்களின் மாவட்ட செயலகத்தினூடாக பெற்றுக்கொள்ள முடியும்.

விண்ணப்பப்படிவங்களை பூரணப்படுத்தி பிரதேச செயலாளர் சிபாரிசுடன் 30.11.2021 ஆம் திகதிக்கு முன் “பணிப்பாளர், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம், இல.180, டீ.பீ. ஜாயா மாவத்தை, கொழும்பு-10” என்ற முகவரிக்கு அனுப்பி வைப்பதுடன் விண்ணப்பபடிவத்தின் பிரதியை culturebranchdmrca@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் ஊடாகவும் அனுப்பி வைக்கவும்.

பிரதேச செயலாளரினால்  சிபாரிசு செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பதையும் கவனத்தில் கொள்ளுமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.



2021 ஆம் ஆண்டின் கலாபூஷண விருதிற்காக விண்ணப்பம் கோரல் 2021 ஆம் ஆண்டின் கலாபூஷண விருதிற்காக விண்ணப்பம் கோரல் Reviewed by Editor on November 25, 2021 Rating: 5