ஓய்வு பெறும் வயதெல்லையை 60 ஆக அதிகரிக்கும் சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லையை 60 ஆக அதிகரிக்கும் சட்டமூலத்தில் சபாநாயகர் இன்று (17) புதன்கிழமை  கையெழுத்திட்டுள்ளார்.

தனியார் துறை ஊழியர்களின் ஓய்வு பெறுவதற்கான குறைந்தபட்ச வயது மற்றும் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான விசேட ஏற்பாடுகள் திருத்தச் சட்டமூலத்தில் குறிப்பிடப் பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

கடந்த 11ஆம் திகதி பாராளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட்டு குறித்த சட்ட மூலம் நிறைவேற்றப் பட்டமை குறிப்பிடத்தக்கது.



ஓய்வு பெறும் வயதெல்லையை 60 ஆக அதிகரிக்கும் சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து ஓய்வு பெறும் வயதெல்லையை 60 ஆக அதிகரிக்கும் சட்டமூலத்தில் சபாநாயகர் கைச்சாத்து Reviewed by Editor on November 17, 2021 Rating: 5