பதவியிலிருந்து விலகும் மிக்கி ஆர்தர்

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராகக் கடமையாற்றும் மிக்கி ஆர்தர் தமது தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகுவதாக டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அறிவித்துள்ளார்.

மிக்கி ஆர்த்தர் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான இலங்கையின் டெஸ்ட் தொடரின் பின் விலகும் முடிவைக் கடிதம் மூலமாக இலங்கை கிரிக்கெட் சபைக்கு அறிவித்துள்ளதாக அறியவருகிறது.

இவரது விலகலானது இலங்கை அணிக்கு இந்த நிலையில் பெரிய இழப்பை ஏற்படுத்தும் என்று கிரிக்கெட் ரசிகர்கள் தெரிவிப்பதும் குறிப்பிடத்தக்கது.




பதவியிலிருந்து விலகும் மிக்கி ஆர்தர் பதவியிலிருந்து விலகும் மிக்கி ஆர்தர் Reviewed by Editor on November 17, 2021 Rating: 5