மின்சாரம் தடைப்பட்டால் நீர்வழங்கலில் தடைப்படும் சிரமத்திற்கு ஒரு மாதத்தில் தீர்வு - முகாமையாளரின் முயற்சிக்கு பாராட்டு

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் காரியாலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று நீர் உந்து நிலையத்தில் பல காலங்களாக திருத்தப்படாமல் இருந்த மின் பிறப்பாக்கியானது (800kVA Generator) அதாவது, இப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டால், மின் பிறப்பாக்கி மூலம் சுமார் 50,000 நீர்ப்பாவனையாளர்களுக்கு இதன் மூலமாகவே நீர் வழங்கல் மேற்கொள்ளப்பட்டது.

இருந்த போதிலும் இந்த மின்பிறப்பாக்கி கடந்த சில வருடங்களாக பழுதடைந்த நிலையில் இருந்து பல பேரும் பல முயற்சிகள் செய்தும் இதுவரையிலும் திருத்தப்படாமல் இருந்தது என்பதை இப்பகுதி நீர்ப்பாவனையாளர்களும், சபையின் உயரதிகாரிகளும் அறிந்திறாமல் இல்லை.

அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளராக கடமையேற்ற  பொறியியலாளர் யூ.கே.எம்.முஸாஜித் அவர்களின் துணிச்சலான முயற்சியால் இவ்மின்பிறப்பாக்கி திருத்தம் செய்வதற்கான சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்குள் திருத்தப்பட்டு இயங்கக்கூடிய அளவில் இவ்இயந்திரத்தினை  பெற்றுக் கொள்வதற்க்கான செயற்பாடுகள் வெற்றி அடைந்துள்ளது.

கொழும்பில் உள்ள Menmaid (Pvt) Ltd நிறுவனத்திடம் இவ்வியந்திரம் கடந்த வாரம் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் யூ.கே.எம்.முஸாஜித் மற்றும் சிரேஷ்ட இயந்திரவியல் பொறியியலாளர் வீ.விணாயகமூர்த்தி ஆகியோரினால் ஒப்படைக்கப்பட்டது.

இதுவரை காலமும் பல அசெளகரியங்களை எதிர் கொண்ட இப் பகுதி நீர் பாவனையாளர்களுக்கு தனது கவலையை தெரிவிப்பதாக முகாமையாளர் தெரிவித்துள்ளார்.



மின்சாரம் தடைப்பட்டால் நீர்வழங்கலில் தடைப்படும் சிரமத்திற்கு ஒரு மாதத்தில் தீர்வு - முகாமையாளரின் முயற்சிக்கு பாராட்டு மின்சாரம் தடைப்பட்டால் நீர்வழங்கலில் தடைப்படும் சிரமத்திற்கு ஒரு மாதத்தில் தீர்வு - முகாமையாளரின் முயற்சிக்கு பாராட்டு Reviewed by Admin Ceylon East on November 07, 2021 Rating: 5