வீர மங்கை ஆசிரியை வருனி அசங்கவின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய பொத்துவில் ஆசிரியர்கள்

(றிஸ்வான் சாலிஹு)

ஆசிரியர் சம்பள முரண்பாட்டு போராட்டத்தில் கலந்து கொண்டு உயிர் நீத்து ஆசிரியர் சமூகத்தை ஆராத்துயரில் ஆழ்த்திய வரலாற்றின் வீர மங்கை ஆசிரியை வருனி அசங்க அவர்களுக்காக அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியர், அதிபர்களிடம் சேமிக்கப்பட்ட நிதித் தொகையை அவரின் குடும்பத்தாரிடம் இன்று (27) சனிக்கிழமை பொத்துவிலைச் சேர்ந்த ஆசிரியர் குழாம் நேரில் சென்று கையளித்தார்கள்.

இவர் ஒர் ஏழை குடும்பத்தில் பிறந்தவர். திருமணமான இரண்டு மூத்த சகோதரிகள். இவரின் தாய் உயிரோடு இல்லை. இந்த அனுபவச் சுமைகளுடன் கூடிய இருதய நோயாளியாகவும்  வாழ்ந்து சாதித்துள்ளார்.சாதிக்கத் துணிந்தவர்களுக்கு சவால்கள் ஒரு சவாலே கிடையாது என்பது வருனியின் குறுகிய வாழ்க்கை வரலாறு சொல்கிறது. வெறும் 27 வயதில் அவரும் சாதித்து எமக்காவும் சாதித்து மரணித்துள்ளார் என்று பொத்துவில் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளார்கள்.

அவருக்காக நிதியுதவி செய்ய இறைவன் யாருக்கெல்லாம் நாடினானானோ அவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் இவர்கள் தெரிவித்துள்ளார்கள்.







வீர மங்கை ஆசிரியை வருனி அசங்கவின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய பொத்துவில் ஆசிரியர்கள் வீர மங்கை ஆசிரியை வருனி அசங்கவின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கிய பொத்துவில் ஆசிரியர்கள் Reviewed by Editor on November 27, 2021 Rating: 5