தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சட்டவியல் தொடர்பான கருத்தரங்கு

(சலீம் றமீஸ்)

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களுக்கான “பால்நிலை, சமநிலை, சமத்துவம், ஒப்புரவு மற்றும் பாலியல் வன்முறை பற்றிய சட்டவியல் விழிப்புணர்வு” தொடர்பாக தெளிவுற்றும் கருத்தரங்கு நிகழ்வு பல்கலைக்கழக பணியாளர்கள் அபிவிருத்தி நிலையத்தின் கேட்போர் கூடத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்றது.

பல்கலைக்கழக பணியாளர்கள், அபிவிருத்தி நிலையம் மற்றும் பால்நிலை, சமநிலை மற்றும் சமத்துவத்துக்கான நிலையமும் இணைந்து நடாத்திய இக்கருத்தரங்கு பல்கலைக்கழக பணியாளர்கள், அபிவிருத்தி நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ஏ.ஜௌபர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் அபுபக்கர் றமீஸ் பிரதம அதிதியாகவும், பதிவாளர் எச்.அப்துல் சத்தார் கௌரவ அதிதியாகவும் மற்றும் பல்கலைக்கழக பால்நிலை,சமநிலை மற்றும் சமத்துவத்துக்கான நிலையத்தின் பணிப்பாளரும் சிரேஷ்ட உதவி நூலகருமான கலாநிதி எம்.எம். மஸ்றூபா, உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி நிலையத்தின் நிகழ்ச்சி முகாமையாளர் சிரேஸ்ட உதவிப் பதிவாளருமான  எம்.ரி.ஏ.அஸ்ஹர் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.

இப்பயிற்சிப்பட்டறையின் வளவாளர்களாக  பல்கலைக்கழக பேரவை உறுப்பினரும், உயர்நீதிமன்ற சிரேஷ்ட சட்டத்தரணியுமான எம்.சி.எம். நவாஸ்,பல்கலைக்கழக சட்டம் மற்றும் ஆவணப்பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட உதவிப் பதிவாளர் சட்டத்தரணி ஏ.ஆர்.எம். சுல்பி அவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.











தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சட்டவியல் தொடர்பான கருத்தரங்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சட்டவியல் தொடர்பான கருத்தரங்கு Reviewed by Editor on November 27, 2021 Rating: 5