வீட்டுத்தோட்டங்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்

அரசின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்திற்கமைவாக ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு வீட்டுத் தோட்டம் எனும் தொனிப்பொருளின்கீழ் விவசாய அமைச்சினால் நாட்டில் 1.2 மில்லியன் வீட்டுத்தோட்டங்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்திற்கமைவாக சௌபாக்கியா வீட்டுத்தோட்ட பயிர்ச்செய்கை வாரம் நவம்பர் 1ஆந் திகதி தொடக்கம் 7ஆந் திகதிவரை அமுல்படுத்தப்பட்டு வருகின்றது. 

இதற்கமைவாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கான நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழுத் தலைவருமாகிய சிவனேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் இன்று (01) கிரான் கமநலசேவை பெரும்பாகப்பிரிவில் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இதன்போது இக்கமநல சேவைப் பிரிவைச்சேர்ந்த சுமார் நான்காயிரம் பயனாளிகளுக்கு வீட்டுத் தோட்டத்திற்கான பயிர் விதைப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் பசுமையான நாடு நஞ்சு விசமற்ற நாளை எனும் தொனிப் பொருளில் இயற்கை தின்மத் தாவரப் போசாக்கைப் பயன்படுத்தி நெற்செய்கை பன்னும் வேலைத்திட்டத்திற்கமைவாக சேதனப் பசளையும்  இதன்போது வழங்கி வைக்கப்பட்டது. 

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 52 ஆயிரம் ஹெக்டேயர் விவசாய நிலத்தல் சேதனப்பசளை பயன்படுத்தி நெற்செய்கை பண்ணப்படவுள்ளதுடன் 23ஆயிரம் ஹெக்டேயர் நிலத்திற்கான சேதனப் பசளை பயன்படுத்துவதற்கான ஊக்குவிப்புப் பணம் வழங்கப்பட்டுள்ளதுடன் 29 ஆயிரம் ஹெக்டேயர் நிலத்திற்கான ஊக்குவிப்புப் பணம் வழங்கப்படவுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபர் கே. கருணாகரன், கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் கே. ஜெகநாத், மாவட்ட உரச்செயலக உதவிப்பணிப்பாளர் கே.எல்.எம். சிராஜ்தீன், தமிழ் மக்கள் வீடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூ. பிரசாந்தன், கிரான் பிரதேச கமநல சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜெயகாந் உள்ளிட்ட மாவட்ட விவசாய திணைக்கள அதிகாரிகள், கமநல சேவை திணைக்கள அதிகாரிகள் பலரும் கலந்து கொண்ட இந்நிகழ்வில் கமநலசேவை நிலையத்தின் புலமைப்பரிசில் நிதியத்தினூடாக மாணவர்களைக் கெளரவிக்கும் நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.

இதன்போது இப்பிரிவில் 2019ஆம் ஆண்டு மருத்துவத் துறைக்கு தெரிவு செய்யப்பட்ட மாவிகள் உட்பட உயர்தரம் கற்கும் மாணவிகள் 10 பேருக்கு நிதியத்தினால் கற்றலுக்கான ஊக்குவிப்புத் தொகை மற்றும் துவிச்சக்கர வண்டிகளுக் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







வீட்டுத்தோட்டங்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம் வீட்டுத்தோட்டங்களை உருவாக்கும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம் Reviewed by Admin Ceylon East on November 01, 2021 Rating: 5