2020ம் ஆண்டுக்கான தேசிய இளைஞர் விருது போட்டியில் நிந்தவூர் பிரதேசத்தின் சார்பாக பங்கு பற்றிய இலங்கை சமுத்திரவியல் பல்கலைக்கழகத்தின் பொறியியல் முகாமைத்துவ பீடத்தில் கடல் மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவ துறையில் முதலாம் வருடத்தில் கல்வி பயிலும் மாணவன் ஜெம்ஷித் ஹஸன் தமிழ் மொழி மூலத்தில் தான் பங்கு பற்றிய சிறுகதை மற்றும் கவிதை ஆகிய 2 போட்டிகளிலும் மாவட்டம், மாகாணம் மற்றும் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடங்களைப் பெற்று அம்பாறை மாவட்டத்தினதும், நிந்தவூர் மண்ணினதும் நாமத்தையும் ஒலிக்கச் செய்துள்ளார்.
இந்த ஆண்டின் இளைஞர் சேவை மன்றத்தின் தமிழ்மொழி மூலமான இரண்டு விருதுகளை பெறும் ஒரே மாணவன் இவராவார். பாடசாலைக் காலங்களிலிருந்து கலை,கலாச்சார போட்டி நிகழ்ச்சிகளில் பங்குபற்றி மாகாண மற்றும் தேசிய மட்டங்களில் பல விருதுகளை பெற்றவராவார்.
இவருக்கான விருது வழங்கல் நிகழ்வு எதிர்வரும் 26ம் திகதி கொழும்பு நெலும் பொக்குனவில் இடம்பெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.