(றிஸ்வான் சாலிஹு)
இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்படும் பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வானது அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் சேவை அதிகாரி எம்.எம்.ஸமீலுல் இலாஹி மற்றும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எல்.பீ. முஹைமீன் ஆகியோரின் ஒருங்கிணைப்புடன் அக்கரைப்பற்று பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத் தலைவர் எம்.எம்.றுக்சான் அவர்களின் தலைமையில் வியாழக்கிழமை (18) அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் வெகு விமர்சையாக நடைபெற்றது.
நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினர் கெளரவ அஸ்மி அப்துல் கபூர் அவர்களும், கௌரவ அதிதிகளாக அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம்.தமீம், அம்பாறை மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவிப் பணிப்பாளர் கங்கா சாகரிக்கா அவர்களும், விஷேட அதிதிகளாக மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான ஏ.முபாறக் அலி, திரு. சிறிவர்தன அவர்களும், அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் சேவை அதிகாரி பீ.எம்.றியாத் மற்றும் தேசிய சம்மேளனப் பிரதிநிதி சிப்னாஸ் ஆகியோர்களும் கலந்து சிறப்பித்தனர்.
பிரதேச இளைஞர் விளையாட்டு விழாவின் ஒட்டுமொத்த வெற்றியாளர்களாக அக்கரைப்பற்று ஹிஜ்ரா இளைஞர் கழகம் தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.