சௌபாக்கியா திட்டத்தின் கீழ் ஆடுகள் வழங்கி வைப்பு

(றிஸ்வான் சாலிஹு)

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் எண்ணத்தில் உருவான சௌபாக்கியா திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்கு ஆடுகள் வழங்கி வைக்கும் நிகழ்வு அக்கரைப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பள்ளிக்குடியிருப்பு- 02ஆம் பிரிவில் அக்கரைப்பற்று பிரதேச செயலக பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எம். தமீம் அவர்களின் தலைமையில் புதன்கிழமை (17) நடைபெற்றது. 

இந்நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலாளர் அஷ்ஷேக் ரீ.எம்.முஹம்மட் அன்ஸார் அவர்களும், அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் கெளரவ எம்.ஏ. றாசிக் அவர்களும், கணக்காளர் சர்தார் மிர்ஷா, கால் நடைவைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஐ. றிப்கான், அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எச்.தம்ஜீது,கிராம சேவை உத்தியோகத்தர் ஏ.எம்.சியாத், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான ஐ.எல்.எம். இர்பான், கே.எல்.தையூப் மற்றும் கே.நஜிமுதீன் SDO ஆகியோரும் கலந்து கொண்டார்கள்.

மக்கள் பங்களிப்புடனான இந்திகழ்சித்  திட்டத்தின் கீழ் ஒவ்வொரு பயனாளிக்கும் தலா ஒரு இலட்சம் பெறுமதியான ஆடுகள் வழங்கி வைக்கப்பட்டது. அத்துடன் இத்திட்டம் தொடர்பாக பயனாளிகளுக்கு அறிவுறைகளும் வழிகாட்டல்களும் வழங்கப்பட்டது.

இத்திட்டத்தில் மேலும் ஆலிம் நகர்  மற்றும் இசங்கணிச்சீமை ஆகிய பிரிவுகளும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.






சௌபாக்கியா திட்டத்தின் கீழ் ஆடுகள் வழங்கி வைப்பு சௌபாக்கியா திட்டத்தின் கீழ் ஆடுகள் வழங்கி வைப்பு Reviewed by Editor on November 18, 2021 Rating: 5