அல் - மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் அதிபர் பாராட்டி கௌரவிப்பு

(எம் .என் .எம் .அப்ராஸ் )

கல்முனை அல் - மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் அதிபர்  எம் . ஐ. அப்துல் ரஸாக் அவர்கள்அதிபர் சேவையின் தரம் 1 க்கு (SLPS-1) பதவி உயர்வு பெற்றதையடுத்து  பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாடசாலையின் பிரதி அதிபர்  ஐ. எல். எம். ஜின்னாஹ் அவர்களின் தலைமையில் பாடசாலை ஆசிரியர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் பாடசாலையின்  கேட்போர் கூடத்தில் நேற்று (23) செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இக் கௌரவிப்பு நிகழ்வில்  பிரதம அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ் .புவனேந்திரன் அவர்களும் விசேட அதிதியாக கல்முனை கோட்டக் கல்வி அதிகாரி வீ . எம் .ஸம்ஸம் அவர்களும் கௌரவ அதிதியாக  கல்முனை வர்த்தக சங்கத் தலைவர் கே.எம்.எம்.சித்தீக், பாடசாலை  அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு செயலாளர்  ஏ.ரிஸ்வாட் ,மற்றும் பாடசாலையின் ஆசிரியர் குழாமினர், பட்டதாரி பயிலுனர்கள், கல்வி சாரா ஊழியர்கள் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

கல்வி சேவையில் நீண்ட அனுபவத்தை  கொண்ட இவரின் சேவையை பாராட்டி  நினைவு சின்னம்  மற்றும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் மேலும்  கலந்து  கொண்டவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர் .



அல் - மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் அதிபர் பாராட்டி கௌரவிப்பு அல் - மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்தின் அதிபர் பாராட்டி கௌரவிப்பு Reviewed by Editor on November 24, 2021 Rating: 5