அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற நீரிழிவு தின நிகழ்வு

(சியாத் எம். இஸ்மாயில், பட உதவி- எஸ். மாதவன்)

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை ஏற்பாடு செய்த விசேட விழிப்புணர்வு  நிகழ்வு  வைத்தியசாலையில் நடைபெற்றது.

ஐக்கிய நாடு சபையின் பிரகடனத்திற்கிணங்க உலக நீரிழிவு தினம் வருடாந்தம் நவம்பர் 14 ஆம் திகதி அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றன.  இத்தினத்தில் நீரிழிவு நோய்  தொடர்பான சிகிச்சை தடுப்பு  மற்றும் முன்னெச்சரிக்கை தொடர்பிலான தலைப்புக்களில் விழிப்புணர்வு செயற்பாடுகள் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் தொற்றா நோய் மற்றும் சுகாதாரக் கல்வி, சுகாதார மேம்பாடு பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.எப். மப்றூஹா  தலைமையில், நடைபெற்ற இந்நிகழ்வில், அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்தியட்சகர் டாக்டர் அஸாத் .எம்.ஹனிபா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு,  நீரிழிவு தொற்றாளர்கள் நாளாந்தம் உட்கொள்ள வேண்டிய உணவுகள், அதன் மாதிரிகள் மற்றும் அது தொடர்பான விழிப்புணர்வு காட்சிப்படுத்தல்களை பார்வையிட்டார்.

நீரிழிவு நோய் பற்றிய  சுவரொட்டிகள், உணவுகளின் மாதிரிகள், உட்கொள்ளும்  முறைகள், தவிர்க்க வேண்டிய உணவுகள், நாளாந்தம் கடைப்பிடிக்க வேண்டிய ஒழங்கு முறைகள் நிகழ்வில் காட்சிப்படுத்தப்பட்டதோடு, தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நோயைக் கட்டுப்படுத்தும் முறை தொடர்பாகவும் இங்கு விளக்கமளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில், தாதிய பரிபாலகர் பீ.ரீ. நெளபர், வைத்தியர்கள், மருத்துவ சேவை உத்தியோகத்தர்கள், தாதியர்கள் தொற்றா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற நீரிழிவு தின நிகழ்வு அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற நீரிழிவு தின நிகழ்வு Reviewed by Editor on November 15, 2021 Rating: 5