கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணியின் ஸ்தாபகர் எம்.ஐ.எம்.முஹியத்தீன் சேர் காலமானார்

ஆராய்ச்சியாளர் -பன்னூலாசிரியர்- புள்ளிவிபரவியலாளர்- ஆவணக் காப்பாளர் என்ற பன்முக அடையாளங்களோடு, இடையறாது இயங்கி வந்த  எம்.ஐ.எம்.முஹியத்தீன் சேர் அவர்கள் இன்று (13) சனிக்கிழமை கொழும்பில் காலமானார்.

முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி (MULF) என்ற அரசியல் கட்சியை நிறுவி, அதன் செயலாளர் நாயகமாக இருந்து சளைக்காமல் செயற்பட்டார். கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணியின் ஸ்தாபகர். முஸ்லிம் செய்தி பத்திரிகையின் ஆசிரியர்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் ஆரம்ப நாட்களில், பழைய அரிசி ஆலைக் கட்டிடத்தைப் புனர் நிர்மாணம் செய்தவர். சுனாமி இழப்புகள் தொடர்பாக தகவல்கள் திரட்டி, ஆய்வு செய்து அதைப் பதிவு செய்தவர். யுத்தகால இழப்புகளை ஆவணப்படுத்தியவர். நிலத் தொடர்பற்ற முஸ்லிம் மாகாணக் கோரிக்கையின் பிதாமகன்.

அக்கரைப்பற்று 2 ஆம் குறிச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், மருதானை நொறிஸ் கனல் வீதியில் மிக நீண்டகாலமாக வசித்து வந்தார். தன் வீட்டையே ஒரு ஆவணக் காப்பகமாக ஒழுங்கமைத்திருந்தார்.

நன்றி - சிறாஜ் மஸ்ஹூர்



கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணியின் ஸ்தாபகர் எம்.ஐ.எம்.முஹியத்தீன் சேர் காலமானார் கிழக்கிலங்கை முஸ்லிம் முன்னணியின் ஸ்தாபகர் எம்.ஐ.எம்.முஹியத்தீன் சேர் காலமானார் Reviewed by Editor on November 13, 2021 Rating: 5