மண்சரிவு அபாயமுள்ள வீதிகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும்

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மண்சரிவு அபாயம் உள்ள நெடுஞ்சாலைகள் மற்றும் வீதிகளை முறையான ஆய்வுகள் மற்றும் கண்காணிப்புகளை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர்.பிரேமசிறி, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமிந்த அத்தலுவகே மற்றும் பணிப்பாளர் நாயகம்  சர்தா வீரகோன் ஆகியோருக்கு பணிப்புரை விடுத்தார்.

சில வீதிகள் அமைக்கப்பட்டு பல வருடங்களாகியும்  இவ்வாறு மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் உள்ள வீதிகள் தொடர்பாக  உரிய முறையில் ஆய்வு செய்யப்படவில்லை என தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ,  வீதி அபிவிருத்தி  அதிகாரசபை அதிகாரிகள் கட்டிட ஆய்வு நிறுவன நிபுணர்கள் ஆகியோரின் உதவியுடன் இந்த வீதிகள் தொடர்பாக  ஆராய்ந்து விரைவில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும்   மேலும் தெரிவித்தார்.




மண்சரிவு அபாயமுள்ள வீதிகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் மண்சரிவு  அபாயமுள்ள  வீதிகளை உடனடியாக ஆய்வு செய்ய வேண்டும் Reviewed by Editor on November 19, 2021 Rating: 5