அக்கரைப்பற்றில் புகைப்படக் கலைஞர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவிப்பு

(றிஸ்வான் சாலிஹு)

Akkaraipattu photography festival 20/21 இன் நிகழ்வை ஒழுங்காகவும் சிறப்பாகவும் நடாத்துவது சம்மந்தமான கலந்துரையாடல் நேற்று (21) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது.

இதில்  சர்வதேச விருது பெற்றமைக்காக சர்வதேச புகைப்பட கலைஞர் டாக்டர் ஆகீல் அஹமட் சரீபுடீன் அவர்களுக்கும், கடந்த வருடம் அரச புகைப்பட போட்டியில் acceptance பெற்ற ஒலுவிலையைச் சேர்ந்த Jamsith Ibnu Easa Lebbe⁩ அவர்களுக்கும், புகைப்பட அரச விருது பெற்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த அப்துல் ஹமீட் அவர்களுக்கும் Club Photo Ceylonica அமைப்பின் சார்பாக கௌரவிக்கப்பட்டார்கள்.

இந்நிகழ்வில் புகைப்படத்துறையைச் சேர்ந்த கலைஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், விளையாட்டு கழகங்களின் நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் மற்றும் இன்னும் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.









அக்கரைப்பற்றில் புகைப்படக் கலைஞர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவிப்பு அக்கரைப்பற்றில் புகைப்படக் கலைஞர்கள் பொன்னாடை போர்த்தி கெளரவிப்பு Reviewed by Editor on November 22, 2021 Rating: 5