பிரதமர் தலைமையில் இடம்பெற்ற தீபாவளிப்பண்டிகை நிகழ்வு

நாட்டில் நிலவுகின்ற கொவிட் – 19 தொற்றுப் பரம்பலைக் கவனத்திற்கொண்டு, அதற்குரிய நடைமுறைகளோடு கூடியதாக, இலங்கைத் திருநாட்டின் பிரதமரும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சருமாகிய மகிந்த ராஜபக்‌ஷ அவர்களின் வாசஸ்தலமாகிய அலரி மாளிகையில், இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களோடு தீபாவளிப் பண்டிகை நிகழ்வு இன்று (04) சிறப்புற நிகழ்ந்தேறியது.

சிறப்புமிகு இந்த நிகழ்வின் முதல் தீபத்தை, பிரதமரின் பாரியார் சிராந்தி ராஜபக்‌ஷ அம்மையார் அவர்கள் ஏற்றி வைத்தார்.

இந்த நிகழ்வின் விசேட அம்சமாக - இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களின் சுபீட்சமானதொரு எதிர் காலம் நோக்கிய பயணத்திற்குத் துணை செய்யும் வகையில் செயற்படுத்தப்பட்டு வருகின்றபுதிய பாடத்திட்ட நடைமுறைக்கு  அமைவாக வெளிடப்பட்ட இந்து சமய அறநெறிக் கல்விப் பாடநூல்கள் மற்றும் செயல் நூல்கள் ஆகியன, பிரதமர் அவர்களால், நிகழ்விலே கலந்துகொண்ட இந்து சமய அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இலங்கைத் திருநாட்டின் மக்களது  சமய சக வாழ்விற்கான ஒரு அடையாளமாக - இந்த சிறப்பு மிகு நிகழ்வு அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.




பிரதமர் தலைமையில் இடம்பெற்ற தீபாவளிப்பண்டிகை நிகழ்வு பிரதமர்  தலைமையில் இடம்பெற்ற தீபாவளிப்பண்டிகை நிகழ்வு Reviewed by Editor on November 04, 2021 Rating: 5