Iconic Youths அமைப்பினால் பாராட்டி கெளரவிக்கப்பட்ட சிறாஜ் மஸ்ஹூர்

(றிஸ்வான் சாலிஹு)

அக்கரைப்பற்று புத்தக காட்சி -2021 இன் பிரதான ஏற்பாட்டாளரும், பேஜஸ் புத்தக நிலையத்தின் உரிமையாளரும், இலக்கிய ஆய்வாளருமான சிறாஜ் மஸ்ஹூர், Iconic Youths -Srilanka அமைப்பினால்,இப்புத்தக காட்சியை சிறப்புற நடாத்தியமை மற்றும் அவரின் இலக்கிய சேவையையும் பாராட்டி வாழ்த்துப் பா மற்றும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.

அக்கரைப்பற்று AIMS சர்வதேச பாடசாலை வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (05) ஆரம்பித்து வைக்கப்பட்ட இக்காட்சியின் மூன்றாவது நாளான நேற்றைய நாளில் (07), அமைப்பின் தலைவரும், சமூக ஆர்வலருமான யூ.எல்.தில்ஷான் மற்றும் அமைப்பின் ஆலோசனை சபை உறுப்பினர்கள் அடங்கலாக இந்த கெளரவிப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



Iconic Youths அமைப்பினால் பாராட்டி கெளரவிக்கப்பட்ட சிறாஜ் மஸ்ஹூர் Iconic Youths அமைப்பினால் பாராட்டி கெளரவிக்கப்பட்ட சிறாஜ் மஸ்ஹூர் Reviewed by Editor on November 08, 2021 Rating: 5