MOH தலைமையில் டெங்கு ஒழிப்பு விசேட சோதனை நடவடிக்கை

தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினை முன்னிட்டு விசேட சோதனை நடவடிக்கை பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்குட்பட்ட பகுதிகளில் இன்று (10) புதன்கிழமை இடம்பெற்றது.

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள டெங்கு நோய் அபாயத்தை கட்டுப்படுத்த தேசிய ரீதியில் விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதியிலும் அண்மைக் காலமாக டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருவதையிட்டு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.யூ.அப்துல் சமட் அவர்களின் தலைமையிலும் கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் அவர்களின் வழிகாட்டலிலும் பிராந்திய சுகாதார சேவை பணிமனை டெங்கு ஒழிப்பு குழு, பொதுச் சுகாதார பரிசோதகர்கள், தன்னார்வ தொண்டர் அணியினர் மற்றும் முப்படையினர் இணைந்து மேற்கொண்ட  சோதனை நடவடிக்கையின் போது பல பேருக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் சுமார் 20 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





MOH தலைமையில் டெங்கு ஒழிப்பு விசேட சோதனை நடவடிக்கை MOH தலைமையில் டெங்கு ஒழிப்பு விசேட சோதனை நடவடிக்கை Reviewed by Editor on November 10, 2021 Rating: 5