கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் சமூகநல வைத்தியர்களுக்கு 04 நாள் பயிற்சிப்பட்டறை

(பைஷல் இஸ்மாயில்)

கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களம் மற்றும் பாராம்பரிய வைத்தியத்துறைக்கான தேசிய நிறுவனம் இணைந்து நாடாத்தும் தாய் சேய் போசனை நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக கிழக்கு மாகாணத்திலுள்ள சமூகநல மருத்துவ உத்தியோகத்தர்களுக்கான 04 நாள் பயிற்சிப்பட்டறையின் இருதி நாள் நிகழ்வு இன்று (16) வியாழக்கிழமை திருகோணமலை சர்வோதய மண்டபத்தில் இடம்பெற்றது.

மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் மேடம் அவர்களின் ஆலோசனைக்கும், அறிவுருத்தல்களுக்கும் அமைவாக இடம்பெரும் இந்தப்பயிற்சி பட்டறையின் ஆரம்ப நிகழ்வில் பாராம்பரிய வைத்தியத்துறைக்கான தேசிய நிறுவனத்தின் விரிவுரையாளர் வைத்தியர் வி.ஜெகதீஸ்வரன், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள திட்டமிடல் பிரிவின் மேற்பார்வை சமூகநல மருத்துவ உத்தியோகத்தர் வைத்தியர் எஸ்.சிவச்செல்வன், வைத்தியர் எஸ்.சதீஸ் ஆகியோர் கலந்துகொண்டு இப்பயிற்சி பட்டறையை ஆரம்பித்து வைத்தனர். 

இறுதிநாள் நிகழ்வின் வளவாளராக மட்டக்களப்பு பிராந்தி ஆயுள்வேத இணைப்பாரும் புதுக்குடியிருப்பு தள ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகருமான வைத்தியர் (திருமதி) ஜெயலட்சுமி பாஸ்க்கரன் கலந்துகொண்டு குறிப்பிட்ட விடயம் தொடர்பில் விரிவுரையை வழங்கி வைத்தார்.

இந்த பயிற்சிப்பட்டறையில் கிழக்கு மாகாணத்திலுள்ள சமூகநல மருத்துவ உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு பல நன்மைகளை பெற்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் சமூகநல வைத்தியர்களுக்கு 04 நாள் பயிற்சிப்பட்டறை கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் சமூகநல வைத்தியர்களுக்கு 04 நாள் பயிற்சிப்பட்டறை Reviewed by Editor on December 16, 2021 Rating: 5