ஒரே நாளில் 128 பேர் ஒமிக்ரோன் தொற்றால் பாதிப்பு

இந்தியாவில் ஒமிக்ரோன் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்று (29) ஒரே நாளில் 128 பேர் ஒமிக்ரோன் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றைய (28) நிலவரப்படி 653 பேர் பாதிக்கபட்டிருந்தனர். இந்த நிலையில் இன்று அதன் எண்ணிக்கை 781 ஆக உயர்ந்துள்ளது. இதனால் ஒரே நாளில் 128 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளையில், ஒமிக்ரோன் பாதிப்பில் இருந்து 241 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில் அதிகபட்சமாக 238 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் 167 பேரும், தமிழகத்தில் 34 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,195 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.



ஒரே நாளில் 128 பேர் ஒமிக்ரோன் தொற்றால் பாதிப்பு ஒரே நாளில் 128 பேர் ஒமிக்ரோன் தொற்றால் பாதிப்பு Reviewed by Editor on December 29, 2021 Rating: 5